என் தாத்தா கொல்லுவேலை பார்த்துக் கொண்டிருந்தார். தாத்தாவின் பட்டறை ஒரு ஆலமரத்தின் நிழலில் இருந்தது..அந்த ஆலமரம் படர்ந்து விரிந்து பிரமாண்டமாக குளக்கரையில் இருந்தது..பின்னாளில் அது வாய்க்காலாக மாறியது..தாத்தாவின் பட்டறைக்கும் தாத்தாவின் வீட்டிற்கும் ஒரே ஒரு சாலைதான் இருந்தது..அந்த சாலை பேருந்து செல்வதற்காக உருவாக்கப்பட்டதாகும்.. அதுவும் கரடு முரடான கற்களை கொட்டி இடையிடையே சிமெண்ட் தொட்டு கொண்டிருக்கும். அந்த ஊருக்கு பேருந்து ஒரு நாளைக்கு ஐந்து முறைதான் வரும் குறிப்பிட்ட நேரங்களில் ..அதனால் அந்த சமயங்களில் குழந்தைகளை சாலையில் விளையாட அனுமதிக்க மாட்டார்கள்..அந்த மாதிரி ஒரு சமயத்தில் தான் என் தங்கை தாத்தா பட்டறைக்கு போவதாக அடம்பிடித்தாள்..அதனால் நான் அவளை தாத்தா பட்டறையில் போய்
விட்டு விட்டு வந்தேன்.. நான் தாத்தா வீட்டின் எதிர் வீட்டில் இரண்டு மூன்று பேரோடு தாயம் ஆடிக் கொண்டிருந்தேன்.. ஒரு மணி நேரம் கடந்திருக்கும்..
சாப்பிடும் நேரம் அது..அதனால் தாத்தாவையும்,தங்கையையும் கூப்பிட பட்டறைக்கு கிளம்பி அந்த குறு சந்தின் முனையில் திரும்ப அழுகை சத்தம் கேட்டது..
வெள்ளி, 17 அக்டோபர், 2008
தாத்தாவோடு..
என் தாத்தாவின் வீட்டில் இருந்த போது இருந்த காலங்களை நெஞ்சை விட்டு நீக்க முடியாது.அந்த நாட்கள் இன்னும் பசுமை மாறாமல் நிழலாடி கொண்டிருக்கிறது..ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் அம்மா அழைத்து போய் விடுவாள்..தம்பியோடும்,தங்கையோடும்,தேவையான துணிமணிகளோடும், எங்கள் பயணம் துவங்கி விடும்.தாத்தா ஊரில் அவ்வளவாக வசதிகள் கிடையாது என்று அம்மா சொல்வாள்.. ஆனாலும் எங்களுக்கு அங்கு செல்வதில் கொள்ளை பிரியம் உண்டு..நான் ஐந்தாவது படித்த போது நடந்த சம்பவம் என்று ஞாபகம்..அப்போது நடந்த அந்த சம்பவம் இன்னும் நெஞ்சை சுடுகிறது..
இது ஒரு மழைக்காலம்
ஒவ்வொரு மழைக்காலமும் மனதில் சிறு சலனங்களை ஏற்படுத்தாமல் போவதில்லை எல்லோர் வாழ்விலும்...அதற்கு நானும் விதிவிலக்கல்ல..
மழைக்காலம் மட்டுமில்லை.. எல்லா பருவ காலங்களும் எதையாவது நம் நினைவில் விதைகளையாவது,களைகளையாவது விட்டுப் போகும்..
அப்படி விட்டுப் போன சில விஷயங்கள் நம்மை மாற்றத்திற்கு உள்ளாக்கும்... தமிழகத்தின் குக்கிராமத்தில் தூவப்பட்ட நான் இப்போது வேரோடி இருக்கும் நிலை பற்றி பகிரவே விரும்புகிறேன்..தொடரும் என் பயணம்...
மழைக்காலம் மட்டுமில்லை.. எல்லா பருவ காலங்களும் எதையாவது நம் நினைவில் விதைகளையாவது,களைகளையாவது விட்டுப் போகும்..
அப்படி விட்டுப் போன சில விஷயங்கள் நம்மை மாற்றத்திற்கு உள்ளாக்கும்... தமிழகத்தின் குக்கிராமத்தில் தூவப்பட்ட நான் இப்போது வேரோடி இருக்கும் நிலை பற்றி பகிரவே விரும்புகிறேன்..தொடரும் என் பயணம்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)